திருப்பதி என்கவுன்ட்டர்: தமிழக முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் - நீதி விசாரணை நடத்தப்படும் என தகவல்

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலத்தில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப் படும் என்று அம்மாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடந்த 7-ம் தேதி காலை தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் 20 ஆந்திர சிறப்பு அதிரடிப் படை போலீஸாரால் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த என்கவுன்ட்டர் குறித்து மனித உரிமை மீறல் எண்ணத்துடன் நீதி விசாரணை நடத்த வேண்டும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு நேற்று பதில் எழுதிய ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, “இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தி, விரைவில் அதற்கான அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திர முதல்வர் தனது கடிதத்தில், நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்