விவசாயி தற்கொலைக்குப் பின்னரும் பேரணியை நடத்தியது தவறு என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மன்னிப்புக் கோரியுள்ளார்.
டெல்லியில் நேற்றுமுன் தினம் ஆம் ஆத்மி சார்பில் நடந்த பேரணியின்போது ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். நிலச் சட்டத்தை எதிர்த்து தற்கொலை செய்வதாக அவர் குறிப்பும் எழுதி வைத்திருந்தார்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், விவசாயி தற்கொலை செய்து கொண்ட பின்னரும் ஆம் ஆத்மி கட்சியினர் பேரணியை தொடர்ந்து நடத்தியதை பல்வேறு கட்சிகளும் வன்மையாக கண்டித்தனர்.
இந்நிலையில், சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர் மவுனம் கலைத்துள்ள கேஜ்ரிவால், "பேரணியில் விவசாயி தற்கொலை செய்து கோனட பின்னர் நிகழ்ச்சியை நிறுத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து நான் தொடர்ந்து பேசியது தவறு. முன்னதாக நான் ஒரு மணி நேரம் பேச திட்டமிட்டிருந்தேன்.
ஆனால், விவசாயி தற்கொலைக்குப் பின்னர் என் பேச்சை 10 நிமிடங்களில் முடித்துக் கொண்டேன். ஆனால், அந்த 10 நிமிடங்கள்கூட நான் பேசியிருக்கக் கூடாது. நான் தவறு செய்துவிட்டேன்.
நான் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் குற்ற உணர்வால் தவிக்கிறேன். நான் பேரணியில் பேசியதற்காக என் மீது குறை கூறுங்கள். ஆனால், பிரச்சினையின் மையப் புள்ளியை மாற்றாதீர்கள்.
விவசாயி தற்கொலை விவகாரத்தை தயவு செய்து அரசியலாக்காதீர். விவசாயி தற்கொலைக்கு காரணமானவர் யாராக இருந்தாலும் தூக்கிலிடப்பட வேண்டும். அதே வேளையில் விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதையும் ஆராய வேண்டும்" என்றார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கேஜ்ரிவால் இவ்வாறு கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago