டெல்லியில் 15 ஆண்டுகள் பழைமையான வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
டெல்லியில் 15 ஆண்டு பழைமையான வாகனங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. இதன்படி, டெல்லியில் பெட்ரோலில் ஓடும் 15 ஆண்டு ஆன பழைய வாகனங்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை எதிர்த்து வழக்கறிஞர் விஷால் ஸ்ரீபதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனது மனுவில், "15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு தடை விதிக்கும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது. எனவே, தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து விசாரித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
தலைமை நீதிபதி தத்து தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
பல நீதிமன்றங்கள் ஏற்கெனவே அளித்த தீர்ப்புகளைதான், பசுமை தீர்ப்பாயம் மீண்டும் உத்தரவாக வெளியிட்டுள்ளது. 15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு தடை விதிக்கும் உத்தரவை முதன்முதலில் ஆந்திர மாநில உயர் நீதிமன்றம்தான் வெளியிட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாயம், மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முயற்சிக்கிறது. அதை நாம் தடுக்க கூடாது. அதற்கு பதில் தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு தலைமை நீதிபதி தத்து தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago