நிதியமைச்சர் பதவி விலகக் கோரி கேரளத்தில் எதிர்க்கட்சிகள் முற்றுகைப் போராட்டம்

By பிடிஐ

மதுபான பார் உரிமையை நீட்டிக்க ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நிதியமைச்சர் கே.எம். மாணி பதவி விலகக் கோரி மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி யினர் தலைமைச் செயலகம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கடந்த மார்ச் 13-ம் தேதி சட்டப்பேரவையில் பெண் எம்எல்ஏ.விடம் அத்துமீறி நடந்து கொண்ட எம்எல்ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போராட்டத் தின்போது வலியுறுத்தப்பட்டது.

எதிர்க்கட்சியினர் மற்றும் எம்எல்ஏ.க்கள் தலைமைச் செயல கத்தை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராகவும், நிதியமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். கொடி யேறி பாலகிருஷ்ணன் முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு எம்எல்ஏ.க்கள் உட்பட பலரை கைது செய்த போலீஸார், போராட்டக்காரர்களை அப்புறப் படுத்தினர். நிதியமைச்சருக்கு எதிராக முதல் தகவலறிக்கை பதிவு செய்து 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் அவர் அமைச்சராகத் தொடர்வதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

முற்றுகைப் போராட்டம் காரணமாக, முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் அமைச்சர்கள் காவல்துறையினரின் உதவியுடன் தள்ளுமுள்ளுகளுக்கு இடையே தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்தனர். தவிர 13 மாவட்டங் களில் எதிர்க்கட்சியினர் போராட் டம் நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்