திருப்பதி கோயிலில் 3 நாள் வசந்தோற்சவம்

By செய்திப்பிரிவு

திருமலை-திருப்பதி தேவஸ் தானம் சார்பில் திருமலையில் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு வசந்தோற்சவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

மூன்று நாட்களும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிகளுக்கு திருமஞ்சன சேவைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன. நிறைவு நாளான 4-ம் தேதி உற்சவ மூர்த்திகளான ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர், ருக்மணி, சத்ய பாமாவுக்கும் திருமஞ்சன சேவைகள் நடைபெறும்.

வரும் 4-ம் தேதி மதியம் 3.45 முதல் இரவு 7.15 வரை சந்திர கிரகணத்தை முன்னிட்டு காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடை சாத்தப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் 4-ம் தேதி அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தேவஸ்தானம் தொிவித்துள்ளது.

இன்று முதல் வசந்தோற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்