ஆந்திர என்கவுன்ட்டர் பிரச்சினையை மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா விதி எண் 267-ன் கீழ் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு ஆந்திர என்கவுன்ட்டர் பிரச்சினையை மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கினார்.
ஆனால், அவை துணைத் தலைவர் பி.ஜெ.குரியன் அதனை ஏற்க மறுத்துவிட்டார். மாறாக, என்கவுன்ட்டர் பிரச்சினை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருமாறும் அதனை அவைத்தலைவர் பரிசீலிப்பார் என்றும் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரெயின், ஏற்கெனவே இணைய சமவாய்ப்பு குறித்து விவாதிக்க அனுமதி கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீது மே 6-ம் தேதிக்குள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என நினைவூட்டினார்.
முன்னதாக, பிஹார் புயலில் சிக்கி 48 பேர் பலியான சம்பவத்துக்கு அவையில் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago