மத்திய பெட்ரோலிய அமைச்சகத் தில் இருந்து திருடப்பட்ட ஆவணங் கள் அனைத்தும் ரகசிய ஆவணங் களாக மத்திய அரசால் வகைப் படுத்தப்பட்டவை என்று நீதி மன்றத்தில் அந்த அமைச்சகம் தெரி வித்துள்ளது.
சமீபத்தில் பெட்ரோலிய அமைச் சகத்தில் ஆவணத் திருட்டு நிகழ்ந் தது. அதைத் தொடர்ந்து ஐந்து பெருநிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிட மிருந்து ஆவணங்களும் கைப் பற்றப்பட்டன. எனினும், அந்த ஆவணங்கள் ரகசிய ஆவணங் களாக வகைப்படுத்தப்பட்டி ருந்தனவா என்பதை அறியாம லேயே போலீஸார் தங்களைக் கைது செய்திருப்பதாக நீதி மன்றத்தில் தெரிவித்திருந்தனர். இதை அடிப்படையாக வைத்து அவர்கள் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை கடந்த 10ம் தேதி விசாரித்த கீழமை நீதிமன்றம் ஒன்று, மேற்படி ஆவணங்கள் ரகசிய ஆவணங்களாக வகைப் படுத்தப்பட்டிருந்தனவா என் பதை அமைச்சகம் தெளிவு படுத்த வேண்டும் என்று உத்தர விட்டிருந்தது. இந்நிலையில், நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சகத்தைச் சேர்ந்த ஓர் உயர் அதிகாரி கூறும் போது, ‘குற்றம்சாட்டப்பட்டவர்களிடமி ருந்து கைப்பற்றப்பட்ட எட்டு ஆவணங்களும் ரகசிய ஆவணங்களாக வகைப்படுத்தப் பட்டவை. அவற்றில் எந்த ஓர் ஆவணமும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை’ என்றார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago