காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்த மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் விதல்பாய் படேல் பகுதியில் உள்ள கிரிராஜ் வீட்டின் முன் காங்கிரஸ் தொண்டர்கள் 30 பேர் குவிந்தனர். கிரிராஜுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அவரைக் கண்டித்து பதாகைகளும் ஏந்தி வந்திருந்தனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "அமைச்சர் கிரிராஜ் வீட்டின்முன் காங்கிரஸார் நடத்திய முதல் போராட்டம் இது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலைமை கட்டுக்குள் உள்ளது" என்றார்.
சோனியா காந்தி நைஜீரியப் பெண்ணாக இருந்திருந்து, வெள்ளை நிறத்தவராக இல்லாமல் இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சி அவருக்குத் தலைவர் பதவியை அளித்திருக்குமா என மத்திய இணையமைச்சர் கிரிராஜ் சிங் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இணையமைச்சர் கிரிராஜ் சிங் கூறும்போது, "அக்கருத்து நான் அதிகாரப்பூர்வமற்ற வகையில் பேசியது. மக்கள் அதிகாரப்பூர்வமற்ற வகையில் இதுபோன்று பேசுவது வழக்கம். எப்படிப்பேசப்பட்டது என்பதையும் பார்க்க வேண்டும். சோனியா, ராகுல் உட்பட யார் மனதையாவது நான் புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
43 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago