ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி வழக்கு விசாரணைக்கு காலக்கெடு விதிக்காதீர்: சிபிஐ

By செய்திப்பிரிவு

பெங்களூருவில் ஐஏஎஸ் அதிகாரி ரவி மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கை மூன்று மாதங் களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்க சிபிஐ மறுத் துள்ளது. இதையடுத்து கர்நாடக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

கர்நாடக வணிக வரித் துறையில் கூடுதல் இயக்குநராக பணியாற்றிய டி.கே.ரவி, கடந்த மார்ச் 16-ம் தேதி தனது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ரவியின் குடும்பத்தினரும் எதிர்க் கட்சியினரும் போராட்டத்தில் ஈடு பட்டதையடுத்து, அம்மாநில முதல்வர் சித்தராமையா வழக்கை சிபிஐ விசா ரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் சென்னையைச் சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை விசாரணையைத் தொடங்கினர். இந்நிலையில் கர்நாடக அரசு, “ரவியின் வழக்கை 3 மாதங்களுக்குள் சிபிஐ அதிகாரி கள் விசாரித்து முடிக்க வேண்டும்” என்று காலக்கெடு விதித்து அரசாணை வெளியிட்டது.

ஆனால் “ஒரு வழக்கு விசாரணை யில் மத்திய அரசோ, மாநில அரசோ காலக்கெடு விதித்து உத்தரவிடு வதை ஏற்க முடியாது. விசா ரணைக்கு காலக்கெடு விதிக்க எந்த சட்டத்திலும் இடம் இல்லை. எனவே இந்த வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது.

எனவே, அந்த அறிவிப்பை திரும் பப் பெறும் வரை சிபிஐ விசாரணை நடைபெறாது. இதனால் விசா ரணையை நிறுத்திவிட்டு சென்னைக்கு திரும்பி இருக்கிறோம். ஒருவேளை புதிய அறிவிப்பு வெளியானால் சிபிஐ விசாரணை தொடரும்” என சிபிஐ தரப்பில் தெரிவித்தனர்.

சிபிஐ அதிகாரிகளுக்கு அழுத்தம் தருவதற்காகவும் விசாரணையை முடக்கவும் அரசு முயற்சிக்கிறது. சிபிஐ அதிகாரிகளுக்கு காலக்கெடு விதிக்காமல் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில், கர்நாடக அரசு நேற்று மாலை புதிய அரசாணையை வெளியிட்டது. அதில் எவ்வித காலக் கெடுவும் குறிப்பிடாமல், ரவி மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு கேட்டுக்கொள் ளப்பட்டுள்ளது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் இந்த வாரத்தில் மீண்டும் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்