5-ம் தேதியுடன் காலாவதி ஆவதால் மீண்டும் நில அவசர சட்டம்: அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் மேற் கொள்வதற்கான அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் 9 திருத்தங்களுடன் மக்களவையில் கடந்த மாதம் நிறைவேறியது. ஆனால் மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் வரும் 5-ம் தேதியுடன் காலாவதி ஆக உள்ளதால், மீண்டும் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு வசதியாக மாநிலங்களவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் முடித்துக் கொள்ளப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்