பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் பகுதி இன்று தொடங்குகிறது.
முதல்நாளிலேயே சர்ச்சைக் குரிய நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளதால் அவையில் அனல் பறக்கும் விவாதம் எழும்பும் என்று தெரிகிறது.
அவை அலுவல் பட்டியல்படி நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி அரசமைப்புச் சட்டத்தின் 123(2)(ஏ)வின் கீழ் குடியரசுத் தலைவர் பிறப்பித்த நில கையகப் படுத்துதல் அவசர சட்டத்தின் நகலை தாக்கல் செய்வார்.
ஏமன் நாட்டில் நடக்கும் கலவரம், அங்கிருந்து இந்தியர் கள் பத்திரமாக மீட்கப்பட்டது பற்றிய அறிக்கையை வெளியுற வுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தாக்கல்செய்வார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் மே 8-ம் தேதி நிறைவடைகிறது. மாநிலங்களவையின் கூட்டம் ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி மே 13-ல் முடிகிறது.
நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை பட்ஜெட் கூட்டத் தின் முதல் பகுதியில் நிறைவேற்ற முடியவில்லை. எனவே 2வது முறையாக அவசர சட்டம் பிறப் பிக்கப்பட்டு அமல் செய்யப் பட்டது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதியில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கும் என்று தெரிகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago