பெங்களூருவில் பள்ளி ஊழியரால் மாணவி சுட்டுக் கொலை

By செய்திப்பிரிவு

பெங்களூருவில் பள்ளி மாணவி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பயின்ற பள்ளியில் பணி செய்த நபரே மாணவியை துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தெரிவிக்கிறது.

மேலும், காதலை நிராகரித்ததன் காரணமாக அந்த மாணவியை அந்த நபர் சுட்டுக் கொன்றிருக்கலாம் என போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, "பெங்களூருவில் உள்ள பிரகதி உண்டு உறைவிடப் பள்ளி ஒன்று இருக்கிறது. இந்தப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு பிரீ யுனிவர்சிட்டி பயின்று வந்தார் 17 வயது மாணவி மாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பள்ளியில் பணிபுரிபவர் மகேஷ் (41).

இவர் அடிக்கடி மாலினியிடம் தான் அவரை காதலிப்பதாக கூறி வந்துள்ளார். மாலினி அதை ஏற்க மறுத்துள்ளார். இந்நிலையில் இன்று காலை (புதன்கிழமை) 10 மணியளவில் மாலினி தங்கியிருந்த அறைக்கு வந்த மகேஷ் அவரை நோக்கி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் மாலினியின் தலை, வாய் பகுதிகளில் குண்டு பாய்ந்துள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மகேஷ் நான்கு முறை சுட்டுள்ளார். இதில் மாலினி அறையில் இருந்த அவரது ஸ்ரீஷாவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என தெரிவித்தனர்.

பரீட்சை முடிந்துவிட்டதால் மாலினி தனது சொந்த ஊரான தும்கூருக்கு இன்று செல்வதாக இருந்துள்ளார். அதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அமைச்சர் பார்வை:

சம்பவம் குறித்து தகவலறிந்த மாநில உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி ஆகியோர் பள்ளிக்கு நேரடியாக சென்றனர். சம்பவ இடத்தில் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.

3 தனிப்படை அமைப்பு:

மாணவியை சுட்டுக் கொன்ற மகேஷ் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார். அவரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கூறியுள்ளது.

பெற்றோர் பதற்றம்:

சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டனர். பள்ளியில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு மாணவியிடமும் விசாரணை முடித்த பின்னரே மாணவிகள் வெளியே அனுப்பப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் பள்ளி மாணவியை சுட்டுக் கொன்ற ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூரு புறநகரில் உள்ள பிரகதி உண்டு உறைவிடப் பள்ளியில் பயின்று வந்த மாணவி மாலினியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே பள்ளியில் பியூன் வேலை பார்த்துவந்த மகேஷ் (41) என்பவர் சுட்டுக் கொன்றார். இவரது துப்பாக்கிச் சூட்டில் மாலினியின் தோழியும் காயமடைந்தார்.

பெங்களூரு புறநகரில் உள்ள பிரகதி உண்டு உறைவிடப் பள்ளியில் பயின்று வந்த மாணவி மாலினியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே பள்ளியில் பியூன் வேலை பார்த்துவந்த மகேஷ் (41) என்பவர் சுட்டுக் கொன்றார். இவரது துப்பாக்கிச் சூட்டில் மாலினியின் தோழியும் காயமடைந்தார்.

கைது:

மாணவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மகேஷை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. மகேஷ், மைசூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த நாட்டுத் அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கியையும் கைப்பற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்