என்கவுன்ட்டரில் இறந்த சசிகுமார் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

திருப்பதி என்கவுன்ட்டரில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சசிகுமாரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய ஆந்திர உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடந்த 7-ம் தேதி திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20 தொழிலாளர்கள், ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து இந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்த திரு வண்ணாமலை மாவட்டம், வேட்ட கிரி பாளையம் கிராமத்தை சேர்ந்த சசிகுமாரின் மனைவி முனியம் மாள், இது போலி என்கவுன்ட்டர் என்றும், தனது கணவரின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், இதனால் சந்திரகிரி போலீஸார் மீது கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யும்படி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இவர், சந்திரகிரி காவல்நிலையத்திலும் தபால் மூலம் புகார் தெரிவித்தார்.

இந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்த சசிகுமாரின் உடல் தற்போது பாதுகாப்பாக பத்திரப் படுத்தி மறுபரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனை யில் வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நேற்று இரண்டா வது முறையாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தனது கணவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என முனியம்மாவின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிமன்றம், மறு பிரேத பரிசோதனை செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், இந்த பிரேத பரிசோ தனைக்கு ஹைதராபாத் நிஜாம் அரசு மருத்துவமனையில் பணி யாற்றும் 3 பேர் அடங்கிய மருத்துவ குழுவை நியமனம் செய்து சென்னைக்கு பாதுகாப் பாக அனுப்பி வைக்கும்படி ஆந்திர அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கான செலவுகளை ஆந்திர அரசே ஏற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனை யின்படி பிரேத பரிசோதனையை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மறு பிரேத பரிசோதனை செய்யும் இடத்தில் தமிழக போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தமிழக தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பித்தது. மறு பிரேத பரிசோதனை விஷயத் தில் எந்தவித கண்டன ஆர்ப் பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த கூடாது எனவும் எச்சரித்துள்ளது. மறு பிரேத பரிசோதனையின் அறிக்கையை வேறு யாருக்கும் வழங்காமல், மூடி முத்திரையிட்டு வரும் திங்கள்கிழமை நேரடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்