உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை சூறாவளி காற்று வீசியது. திடீரென புழுதியை கிளப்பியபடி புயலாக மாறியது. தலைநகர் லக்னோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புழுதிப் புயல் பலமாக வீசியதால், அங்கிருந்த விளம்பர பலகைகள், மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. பல இடங்களில் புழுதிப் புயலில் சிக்கியும், விளம்பர பலகைகள் விழுந்ததிலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
புழுதிப் புயலில் இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மின் மாற்றிகள் சேதம் அடைந்ததால், 20 மணி நேரத்துக்கும் மேலாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக் கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். புழுதிப் புயலால் பல இடங்களில் கோதுமைப் பயிர்கள் சேதம் அடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த கோதுமை உட்பட பல பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். லக்னோ அருகில் மாங்காய் அறுவடையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆக்ரா, பரேலி, சீதாபூர் உட்பட உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago