நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் தப்பிக்க முயற்சி: தெலங்கானாவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

By செய்திப்பிரிவு

தெலங்கானாவில் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாதைச் சேர்ந்தவர் விக்ருதீன் அகமது (30). தெரீக்-கல்பா-இ-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கிய அவர் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இரண்டு போலீஸாரை சுட்டுக் கொன்றது, குஜராத் உள்துறை அமைச்சர் மீது தாக்குதல் நடத்தி யது உள்ளிட்ட பல்வேறு வழக்கு கள் அவர் மீது உள்ளன. பாகிஸ் தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. யுடன் விக்ருதீன் அகமதுவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.

தலைமறைவாக இருந்த அவர் கடந்த 2010-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளி கள் முகமது ஹனீப், சையது அகமது அலி, இஷார் கான், முகமது ஜாஹிர் ஆகியோரும் கைது செய்யப் பட்டனர். இவர்கள் விசாகப்பட்டினம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு வன்முறையில் ஈடுபட்ட தால் வாரங்கல் சிறைக்கு மாற்றப் பட்டனர். இந்நிலையில் விக்ருதீன் அகமது உள்ளிட்ட 5 பேரையும் ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் நேற்று அழைத்துச் சென்றனர்.

அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு அவர்கள் தப்பிக்க முயன்றபோது 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

என்கவுன்ட்டர் நடத்தியது எப்படி?

இந்த என்கவுன்ட்டர் குறித்து தெலங்கானா போலீஸ் வட்டாரங் கள் கூறியதாவது:

வாரங்கல் சிறையில் இருந்து காலை 8.30 மணிக்கு விக்ருதீன் அகமது உள்ளிட்ட 5 பேரையும் வேனில் ஏற்றிக் கொண்டு போலீ ஸார் புறப்பட்டனர். அவர்களுடன் 17 போலீஸார் பாதுகாப்புக்கு சென்றனர்.

ஹைதராபாத்-வாரங்கல் நெடுஞ் சாலையில் கண்டிகாடா தண்டா என்ற இடத்தில் காலை 10.25 மணிக்கு வேன் வந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக வேனை நிறுத்துமாறு விக்ருதீன் அகமது கோரினார்.

அந்த இடத்தில் போலீஸார் வேனை நிறுத்தினர். ஐந்து பேரும் கீழே இறங்கியவுடன் அருகில் நின்ற போலீஸாரின் துப்பாக்கியை பறித்து சுட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட மற்ற போலீஸார் அவர் கள் ஐந்து பேரையும் சுட்டு வீழ்த்தி னர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவ இடத்தில் வாரங்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஏ.கே.ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநில போலீஸ் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.

ஐந்து தீவிரவாதிகளின் உடல் களும் ஜாங்கோன் நகர அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

2-வது என்கவுன்ட்டர் சம்பவம்

சில நாட்களுக்கு முன்பு நலகொண்டா மாவட்டம், சூர்யாபேட்டை பஸ் நிலையத்தில் நின்றிருந்த 2 போலீஸாரை சிமி தீவிரவாதிகள் இரண்டு பேர் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். போலீஸார் நடத்திய தீவிர வேட்டையில் 2 தீவிரவாதிகளும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த என்கவுன்ட்டர் நடைபெற்ற ஒரு வாரத்துக்குள் வாரங்கல் மாவட்டத்தில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்