திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்த 20 தமிழக தொழிலாளர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் ஆந்திர அரசு தாக்கல் செய்தது.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 7-ம் தேதி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் ஆந்திர அதிரடிப்படை போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுப்படி, திருப்பதியில் உள்ள ருய்யா அரசு மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஆந்திர காலையில் தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சசிகுமார், முருகன், முனுசாமி, மூர்த்தி, மகேந்திரன் மற்றும் பெருமாள் ஆகிய 6 பேரின் சடலங்களுக்கு நடத்தப்பட்ட மறு பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி விசாரனையை ஒத்தி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago