என்கவுன்ட்டரில் 5 தீவிரவாதிகள் பலி: பதில் மனு தாக்கல் செய்ய தெலங்கானா அரசுக்கு உத்தரவு - உயர் நீதிமன்றம் நடவடிக்கை

By பிடிஐ

தெலங்கானா மாநிலத்தில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப் பட்ட தீவிரவாதிகளில் ஒருவரது தந்தை தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக, பதில் மனு தாக்கல் செய்யுமாறு தெலங்கானா அரசுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது

வாரங்கலில் உள்ள சிறையி லிருந்து ஹைதராபாத் நீதிமன்றத் துக்கு அழைத்துச் சென்றபோது, போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக விகுவர் அகமது மற்றும் 4 தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

கடந்த 11-ம் தேதி இதுதொடர்பாக அலையர் போலீஸ் நிலையத்தில் விகுவரின் தந்தை புகார் செய்தார். தனது மகன் மற்றும் 4 பேரை போலீஸார் போலி என்கவுன்ட்டரில் கொன்று விட்டதாகவும், சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி யிருந்தார். எனினும் வழக்கு பதிவு செய்யவில்லை.

இந்நிலையில், இதுதொடர்பாக விகுவர் அகமதுவின் தந்தை ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உள்ளார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்யுமாறு தெலங்கானா அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்