என்கவுன்ட்டரில் பலியானவரின் மனைவி தபால் மூலம் புகார்: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

By என்.மகேஷ் குமார்

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடந்த 7-ம் தேதி நடந்த என்கவுன்ட்டர் தொடர்பாக மத்திய மனித உரிமை ஆணையம் மற்றும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

என்கவுன்ட்டரில் ஈடுபட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யும்படி ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டம், வேட்டகிரிபாளையத்தை சேர்ந்த சசி குமார் என்பவரின் மனைவி முனியம்மாள், கடந்த 11-ம் தேதி விரைவுத் தபால் மூலம் சந்திரகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘தனது கணவரை ஆந்திர போலீஸார் வலுகட்டாயமாக அழைத்து சென்று என்கவுன்ட்டர் செய்த போலீஸார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து நேற்று ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. முனியம்மாள் புகார் காவல்துறையினருக்குக் கிடைத்ததா? இதுவரை இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என நீதி மன்றம் போலீஸாரை கேட்டது. இது தொடர்பாக மீண்டும் புதன்கிழமை (நாளை) விசாரணை நடத்தப்படும் என நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது போலீஸார், வனத்துறை அதிகாரி கள் யாரும், ஊடகங்கள், செய்தி யாளர்களுக்கு எந்தவித தகவல் களையும் தரக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முனியம்மாவுக்கு சட்டரீதியான உதவிகள் செய்ய சட்டப் பணிகள் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்