தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக கேரள ஆளுநர் பி.சதாசிவத்தை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருப் பதை எதிர்த்து அனைத்து இந்திய பார் அசோசியேஷன் (ஏஐபிஏ) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
உரிய நடைமுறைகள் பின்பற் றாமல், ஒரே முடிவாக தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவிக்கு சதாசிவம் பரிசீலிக்கப்பட்டது தவறு. மத்திய அரசின் இம்முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி ஏஐபிஏ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை திங்கள்கிழமை அவசரமாக விசாரிக்க வேண்டும் என ஏஐபிஏ வேண்டுகோள் விடுத்துள்ளது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான நீதிபதி அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு, எப்போது விசாரணை என்பதை ஆலோசித்து அறிவிப் பதாகத் தெரிவித்துள்ளது.
இம்மனு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
21 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago