நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன் ரகுராம் ராஜன் ஆலோசனை

மத்திய நிதியமைச்சராகப் பதவியேற்றுள்ள அருண் ஜேட்லியை, ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சந்தித்துப் பேசினார்.

தற்போதைய பணவீக்க அளவு, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.

மத்திய நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அருண் ஜேட்லி இன்று தனது அமைச்சகத்திற்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதையடுத்து, அவரை ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம் ராஜன், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை, அவரது அமைச்சகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தெரிவித்தார்.

பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தை சமநிலையில் இருக்க செய்ய தேவையான அனைத்து வெளிப்படையான நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி தொடரும் என்று ஜேட்லியிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் உள்ள பணவீக்க அளவு மற்றும் இந்திய பொருளாதாராப் பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் இருவரும் ஆலோசித்தாகவும் தெரிகிறது.

நிதியமைச்சராக பொறுப்பேற்ற அருண் ஜேட்லி, "என் முன் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. வளர்ச்சியின் வேகத்தை துரிதப்படுத்துவதும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதுமே தற்போதைய தேவை. மேலும் விலைவாசியை கட்டுப்படுத்துவதே முதல் கடமை" என்று கூறியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE