பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு அதிபர் பிரான்ஷுவா ஹொலாந்தை சந்தித்துப் பேசினார்.அப்போது பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவது, அணுமின் நிலையம் அமைப்பது உட்பட 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸில் நான்கு நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த நாட்டு அதிபர் பிரான்ஷுவா ஹொலாந்தை நேற்றுமுன்தினம் இரவு அவர் சந்தித்துப் பேசினார்.
அப்போது பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மகாராஷ்டிராவின் ஜெய்தாபூரில் அணுமின் நிலையம் அமைக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இவை தவிர இந்திய, பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பான மேகா டிராப்பிக்ஸ் செயற்கைக்கோளில் இருந்து தகவல்களைப் பெறுதல், தொழில் துறை, விண்வெளி ஆராய்ச்சி, சமூக கட்டமைப்பு, கல்வி, சுற்றுலா மேம்பாடு, இளைஞர்கள் திறன் மேம்பாடு, ஆயுர்வேத மருத்துவம் ஆகியவை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மொத்தம் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ரூ.6,000 கோடி முதலீடு
இதைத் தொடர்ந்து பிரான்ஸ் தொழிலதிபர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் இணையுமாறு தொழிலதிபர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அதிபர் பிரான்ஷுவா ஹொலாந்த், பிரான்ஸ் நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் ரூ.6,000 கோடி வரை முதலீடு செய்யப்பட உள்ளது என்று அறிவித்தார். முன்னதாக மோடியும், ஹொலந்தும் இணைந்து செய்னி நதியில் படகுப் பயணம் மேற்கொண்டனர். அவர்களுடன் அந்த நாட்டு முக்கிய அமைச்சர்களும் உடன் சென்றனர்.
ஏர் பஸ் நிறுவனம் ஆர்வம்
மூன்றாவது நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி விமான தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் தொழிற்சாலைக்கு சென்றார். அப்போது இந்தியாவில் தயாரிப் போம் திட்டத்தில் இணையுமாறு ஏர் பஸ் நிறுவனத்துக்கு மோடி அழைப்பு விடுத்தார். அதை அந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago