சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கு: 29-ம் தேதி சல்மான் கான் ஆஜராக ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவு

By பிடிஐ

ஆயுத சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், நேரில் ஆஜராகுமாறு இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதி மன்றம் உத்தரவிட்டிருந்த நிலை யில், உடல்நிலையை காரணம் காட்டி அவர் நேற்று ஆஜராக வில்லை.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராவதி லிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சல்மான் கானின் வழக்கறிஞர் எச்.எம்.சரஸ்வத் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை ஜுடீசியல் மாஜிஸ் திரேட் அனுபமா பிஜ்லானி வரும் 29-ம் தேதி ஆஜராகி வாக்கு மூலத்தை பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார்.

முன்னதாக, 5 அரசுத்தரப்பு சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்த அனுமதி கோரி சல்மான் கான் வழக்கறிஞர் நேற்று முன் தினம் ஒரு மனு தாக்கல் செய் திருந்தார். இந்த மனு விசார ணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட தையடுத்து, நேற்று வாதம் நடைபெற்றது.

அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் என்.கே.சங்க்லா வாதாடும்போது, “அரசுத் தரப்பு சாட்சிகளிடம் ஏற்கெனவே குறுக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் மீண்டும் விசாரணை நடத்த அனுமதிக்கக் கூடாது. இது வழக்கை தாமதப்படுத்து வதற்கான முயற்சி” என்றார்.

அரசு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சல்மான் கான் வழக்கறிஞரின் மனுவை தள்ளுபடி செய்தது.

கடந்த 1998-ம் ஆண்டு படப்பிடிப்புக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சென்ற சல்மான் கான், மான்களை வேட்டையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, உரிமம் காலாவதியான துப்பாக்கியை சல்மான் கான் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர் மீது சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே 2002-ம் ஆண்டு சல்மான் கான் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் மே 6-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மும்பை நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

இதே வழக்கில் போலீஸார் பொய்யான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக சந்தோஷ் தவுந்த்கர் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். விபத்து நிகழ்ந்தபோது சல்மானுடன் காரில் இருந்த கமல் கானிடம் போலீஸார் விசாரணை நடத்தவில்லை என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மே 6-ம் தேதி தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, போலீஸாருக்கு எதிரான இந்த மனு குறித்து முடிவு செய்யப்படும் என்று மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்