காங்கிரஸுக்கு 11 தொகுதிகள் ஒதுக்க தயார்: நாளைக்குள் முடிவு சொல்ல லாலு நிபந்தனை

By செய்திப்பிரிவு

பிஹாரில் ராஷ்டிரீய ஜனதா கட்சியுடன் கூட்டு சேர காங்கிரஸுக்கு 11 தொகுதிகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்க தயாராக இருப்பதாக ராஷ்டிரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.

நாளை (ஞாயிற்றுக் கிழமை) ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்திற்கு முன்னர் தொகுதிப் பங்கீடு குறித்து தங்கள் நிலைப்பாட்டை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தெரிவிக்குமாறும் லாலு வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி அமைப்பதற்கான காலக்கெடு முடிந்து விட்டதாக லாலு தெரிவித்திருந்தார். இந்நிலையில், கூட்டணி வாய்ப்புகள் குறித்து இன்று லாலு தன் நிலைப்பாட்டை மாற்றி உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்