ஆயுத வியாபாரிகளின் தூண்டுதலால் ஊடகங்கள் அவதூறு பிரச்சாரம்: மத்திய அமைச்சர் வி.கே.சிங் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ஆயுத வியாபாரிகள் தூண்டுதலின் பேரில் ஊடகங்களில் ஒரு பிரிவினர் தன் மீது அவதூறு பிரச்சாரம் செய்வதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அவர் நேற்று கூறும்போது, “ஊடகங் களில் ஒரு பிரிவினர் மூலமாக எனக்கு எதிராக அவதூறு பரப்பு வதில் ஆயுத வியாபாரிகள் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளனர். நான் ராணுவத் தளபதியாக இருந்த போது, அவர்கள் விருப்பத்துக் கேற்ப வளைந்துகொடுக்க வில்லை. இதனால் அவர்கள் இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். பலருக்கு அவர்களால் பணம் தரப்பட்டுள்ளது. பத்திரிகையா ளர்கள் சிலர் அவர்கள் சொல் வதை எழுதுகின்றனர்” என்றார்.

டெல்லியில் உள்ள பாகிஸ் தான் தூதரகத்தில் கடந்த மார்ச் 23-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி யில் வி.கே. சிங் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமீபத்தில் அவர் ஏமனில் இருந்து இந்தியர்களை மீட்டு வரும் பணியை மேற்பார்வை யிடச் சென்றபோது, அங்கு இந்தியா, பாகிஸ்தான் மீட்பு நட வடிக்கைகளை ஒப்பிட்டு பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி யது. இந்நிலையில் இது தொடர் பான கேள்விகளுக்கு வி.கே.சிங் இவ்வாறு பதில் அளித்தார்.

வி.கே.சிங் மேலும் கூறும் போது, “ஆயுத வியாபாரிகளிடம் இருந்து பலரும் எவ்வளவு தொகை வாங்கினார்கள் என்று எங்களுக்குத் தெரியும்.பாகிஸ் தான் தேசிய நாள் விழாவில் நான் பங்கேற்றது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். நான் குறி வைக்கப்படுவதற்கான காரணத்தை அவரிடம் விளக் கினேன். அவர் ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறினார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

41 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்