ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் பவானி சிங் நியமனத்துக்கு எதிரான மனு வரும் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
பவானி சிங்கின் நியமனத்தை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து நேற்றுமுன்தினம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.
நீதிபதி மதன் பி.லோகுர், 'பவானிசிங் நியமனம் செல்லாது' என்றும் மற்றொரு நீதிபதி பானுமதி, ‘பவானிசிங் நியமனம் செல்லும்' என்றும் தீர்ப்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.
இதன்படி இந்த மனு வரும் 21-ம் தேதி மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.
இத்தகவலை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அமர்வில் இடம்பெறும் மூன்று நீதிபதிகளின் பெயர்களை தலைமை நீதிபதி பின்னர் அறிவி்ப்பார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago