திருப்பதி என்கவுன்ட்டர் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் வனத்துறை அமைச்சருமான பி. ராமசந்திரா ரெட்டி கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று சித்தூரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக கூலித் தொழிலாளர்கள் மீது நடத்தியது போலி என்கவுன்ட்டர் ஆகும். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.
இந்த சம்பவத்துக்கு முதல்வர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின் கீழ் முதல்வர், உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் இந்த என்கவுன்ட்டரில் பங்கேற்ற அனைத்து போலீஸார் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
இதில் நீதி கிடைக்கும் வரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போராடும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago