நேபாளத்தில் நேற்று முன்தினம் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.9 ஆக பதிவானது. இதில், பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
குறிப்பாக, தலைநகர் காத் மாண்டுவில் 12-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் கட்டப்பட்ட பல்வேறு கோயில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் இடிந்து விழுந்தன.
தர்பார் சதுக்கத்தில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் வகையில், 9 தளங்கள் மற்றும் 200 சுருள் வளைவு படிக்கட்டுகளைக் கொண்டிருந்த தரஹரா கோபுரமும் இடிந்து விழுந்தன.
இதுகுறித்து கட்டிட இடிபாட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தர்மு சுபேதி (36) கூறும்போது, “தரஹரா கோபுரத்தில் ஏறுவதற்காக டிக்கெட் வாங்கி காத்திருந்தேன். அப்போது, அந்த கோபுரம் திடீரென சரிந்து விழுந்தது. ஒரு சில நிமிடங்களில் தரைமட்டமான அந்த கட்டிட இடிபாட்டில் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்” என்றார்.
பதான் மற்றும் பக்தா பூரில் முன்னாள் மன்னர்கள் வசித்த 3 அரண்மனைகளை உள்ளடக் கிய சதுக்கம் உள்ளது. நிலநடுக் கத்தால் இந்த கலாச்சார நினைவுச் சின்னங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்களை யுனெஸ்கோ அமைப்பு திரட்டி வருகிறது. இதுகுறித்து யுனேஸ் கோவின் நேபாளத்துக்கான பிரதி நிதி கிறிஸ்டியன் மேன்ஹார்ட் கூறியதாவது:
காத்மாண்டு, பதான் மற்றும் பக்தாபூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தர்பார் சதுக்கங்கள் மோசமாக சேதமடைந்துள்ளதை அறிவோம். மேலும் பல கோயில் களும் இடிந்து விழுந்துள்ளன. ஐ.நா.வின் அனைத்து அமைப்பு களிடமும் நேபாள அரசு உதவி கோரியுள்ளது.
சேதமடைந்த நினைவுச் சின்னங்களை மீண்டும் கட்டுவது குறித்தும் இதற்கு யுனெஸ்கோ எவ்வளவு நிதியுதவி வழங்கும் என்றும் இப்போது எதுவும் சொல்ல முடியாது. யுனேஸ்கோவின் மற்றொரு உலக பாரம்பரிய பகுதியும் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் பிறந்ததாகக் கூறப்படும் லும்பினியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இனிமேல்தான் ஆராய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல் துறை தலைவர் பி.டி.பாலாஜி கூறும்போது, “பாதிக்கப் பட்ட நினைவுச் சின்னங்கள் மீண்டும் கட்டப்படுமா என்பது தெரிய வில்லை. கடந்த 1833 மற்றும் 1934-ம் ஆண்டுகளில் காத்மாண்டு வில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக் கத்தில் பாதிக்கப்பட்ட சில நினைவுச் சின்னங்கள் மீண்டும் கட்டப் பட்டதாக யுனேஸ்கோ தெரிவித் துள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago