புகையிலைப் பொருட்களால் பாதிப்பு ஏற்படாது என்று தங்களை மருத்துவ நிபுணர்களாக கருதிக்கொள்ளும் அரசியல்வாதிகள் சிலர் கூறுகின்றனர் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.
புகையிலைப் பொருட்கள் பயன் படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் என்பதற்கு, உள்நாட்டு ஆதாரம் (ஆய்வு முடிவுகள்) ஏதுமில்லை என்று நாடாளுமன்றக் குழு தலைவர் திலீப் காந்தி (அகமதுநகர் பாஜக எம்.பி.) கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் திலீப் காந்தியை கிண் டல் செய்யும் வகையில் சரத் பவார் இவ்வாறு கூறினார். மேலும் புகை யிலை பயன்படுத்தியதால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பையும் அவர் விளக் கினார்.
இது தொடர்பாக சரத் பவார் நேற்று அகமதுநகரில் கூறும்போது, “மருத்துவத் துறையில் நான் நிபுணத் துவம் பெற்றவன் இல்லை. எனக்கு குட்கா போடும் பழக்கம் இருந்தது. இதனால் எனக்கு வாய் புற்றுநோய் ஏற் பட்டது. இதற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இதில் எனது மேல் தாடையில் ஒரு பல்லும் கீழ் தாடையில் ஒரு பல்லும் நீக்கப்பட்டன. உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்ட தால் நான் உயிர் பிழைத்தேன். ஆனால் இங்குள்ள (அகமதுநகர்) அதிமேதாவி அரசியல்வாதி புகையிலையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறார். மருத்து வத் துறையில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர்களாக இவர்கள் தங்களை கருதிக்கொள்கின்றனர்” என்றார்.
இதனிடையே பாஜக எம்.பி. திலீப் காந்தி, “புகையிலையால் செரிமானம் அதிகரிக்கும்” என்று மற்றொரு சர்ச்சை கருத்தை கூறினார்.
அகமதுநகர் மாவட்டம், அதால் என்று கிராமத்தில் கடந்த வெள்ளிக் கிழமை அவர் பேசும்போது, “புகை யிலையால் புற்றுநோய் ஏற்படும் என் பதற்கு ஆதாரமாக உள்நாட்டு ஆய்வு முடிவுகள் ஏதுமில்லை. புகையிலை மெல்லும் பழக்கமுடைய பலர் 100 ஆண்டுகள் வரை வாழ்வதை பார்க் கிறோம். புகையிலை போடுவதால் செரி மானம் அதிகரிக்கும். மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் 4 கோடி பேர் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எனவே நம் நாட்டு சூழ்நிலையையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
58 mins ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago