பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி

By பிடிஐ

மேற்கு வங்க மாநிலம் பர்தமன் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ உள்ளிட்ட தற்காப்புக் கலைப் பயிற்சிகளை வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பர்தமனில் பள்ளிக்கல்வி கற்கும் பெரும்பாலான மாணவிகள் தொலைவில் உள்ள கிராமங்களில் இருந்து காட்டு வழியே தனியாக வருகிறார்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டு சில சமூக விரோதிகள் அந்த மாணவிகள் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களை மேற்கொள்கின்றனர்.

இத்தகைய பிரச்சினைகளால் பல மாணவிகளை பள்ளிக்கு அனுப்புவதை அவர்களின் பெற்றோர்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். எனவே இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, இந்த மாவட்டத்தில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவிகளுக்கும் தற்காப்புக் கலைப் பயிற்சிகளை வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் சவுமித்ர மோகன் கூறியதாவது: ‘சர்வ சிக்ஷ அபியான்' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த தற்காப்புக் கலைப் பயிற்சி மாணவிகளுக்குப் பல விதங்களில் உதவும். அதன் மூலம் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பிரச்சினையை ஓரளவு சமாளிக்க முடியும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்