திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் 2-வது நாளாக இன்றும் மக்களவையில் எதிரொலித்தது.
இன்று மக்களவையின் பூஜ்ய நேரத்தின்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. இ.அகமது ஆந்திர என்கவுன்ட்டர் பிரச்சினையை எழுப்பினார். ஆந்திர என்கவுன்ட்டரில் சிறுபான்மையினர் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆந்திர என்கவுன்ட்டர் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். அது முடியாவிட்டால் சி.பி.ஐ. விசாரணைக்காவது உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை, ஆந்திர என்கவுன்ட்டர் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்விவகாரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன், "நீங்கள் ஒரு துணை சபாநாயகர். நீங்கள் இவ்வாறு நேரடியாக ஒரு பிரச்சினையைப் பற்றி பேசக்கூடாது" என்றார்.
காங்கிரஸ் கட்சியினரும் ஆந்திர என்கவுன்ட்டருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago