காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது கட்சிப் பணிகளில் இருந்து விடுப்பு சென்றது நினைவிருக்கலாம். ஆனால் அவர் விடுப்பு பெற்று எங்கே சென்றார் என்பதில்தான் மர்மம் நீடிக்கிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கியது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத்தொடருக்கு முன்னரே ராகுல் தனது விடுப்பு குறித்து கட்சி தலைமையிடம் தெரிவித்து விட்டார். ஆனால் அவரது விடுப்பு முடிவு பெறாமல் ஒரு மாதத்துக்கு அதிகமாக நீடித்துக்கொண்டு செல்கிறது.
ராகுல் எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? என்பது குறித்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான தகவல்கள் வெளியாயின.
இந்த பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஏப்ரல் 19-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சி நடத்தும் விவசாயிகள் பொதுக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அப்படியும் 'ராகுல் எங்கே..?' என்ற கேள்வி தினமும் அரசியலில் எழுப்பப்பட்டு வருகிறது.
மற்ற கட்சிகளின் சந்தேகப் பேச்சும் விமர்சனங்களையும் தாண்டி, காங்கிரஸ் கட்சியினருக்கே ராகுல் இருக்கும் இடம் புரியாத புதிராக இருக்கிறது.
இன்றுகூட, ராகுல் பாதுகாப்பாக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். ஆனால், எங்கே? எப்படி? விவரங்களை அவரும் வெளியிடவில்லை. ஏப்ரல் 19 வரை காத்திருக்க வேண்டும்.
ட்வீட்டாம்லேட் பகுதிக்காக ராகுல் காந்தியை >ராகுல் என டைப் செய்து ட்விட்டரில் தேடியபோது சிக்கிய முத்துக்களில் சில:
இரண்டாம்துக்ளக் @2amtughluq - ராகுல் வருகிறார்: #திக்விஜய்சிங் #ஒரே ஒரு குருக்கள் வருகிறார் வழிவிடுங்கோ!!
Iyyanars* @iyyanars - ராகுல் காந்தி பாதுகாப்பாக இருக்கிறார்: சல்மான் குர்ஷித் #வெளிய வெய்யில் அதிகமா இருக்கு..அப்படியே ஃபிரிட்ஜூ குள்ளேயே உக்காரச் சொல்லுங்க!
சி.பி.செந்தில்குமார் @senthilcp - காங்கிரஸ் கட்சிக்கு ராகு எட்டாம் இடத்தில் இருக்கார் | ரொம்ப கஷ்டம் | ராகுல் எட்டாத இடத்தில் இருக்கார். ரொம்ப நஷ்டம்
காட்டுப்பயல் @sundartsp - மலேசியா விமானத்தை அடுத்து அதிகம் தேடப்படுவது ராகுல் காந்தி தான் போல
டீட்டோட்டலர் @vinodhkrs - ஒருத்தர் இருக்குறப்ப அவர யாரும் கண்டுக்கறதில்ல. இல்லாதப்பதான் அவர பத்தி நினைக்கிறோம் - ராகுல் காந்தி
கிரிகாலன் @girikaalan - ராகுல் பாதுகாப்பாக உள்ளார் - குர்ஷித் #அவரு என்ன ஏமன்ல சண்டை போட்டுட்டா இருக்கிறாரு.. வெக்கேஷனல போனவருக்கு என்ன பாதுகாப்பு வேண்டி கிடக்கு?!
Tintoo @Tintoo727 - காங்: - கருப்பு பணம் எங்கட? | மோடி: ராகுல் எங்கனு சொல்லு தரேன் | காங்: ஙே
Jai @ItisJai - வெட்டோரிய பார்த்தா ராகுல் காந்தி மாதிரியே இருக்காப்ள.. எனக்கு மட்டும் தானா...?
பாட்ஷா @qadirbasha - மோடி பதவிக்கு வந்ததிலிருந்தே paid vacationலதான் இருக்கார், நாடு நாடா சுத்திக்கிட்டு! இவங்களுக்கு ராகுல் vacation போனதுதான் பிரச்னை.
சுஷ்மா சேகர் @amas - சினிமா நடிகைகள் சில காலம் காணாமல் போய் இன்னும் அழகாகத் திரும்பி வருவார்கள். நம்ம ராகுல் திரும்பி வரும்போது அதிக அறிவுடன் வருவாரோ?
நா.குமரேசன் @kumaresann - காங்கிரஸ் தலைவராக மே மாதம் ராகுல் பொறுப்பேற்பு - காங்கிரஸ் தகவல். அப்போ.. மே மாசமும் வரமாட்டார்னு சொல்லுங்க!!
மதுரை Mutant @CitizenSaravana - ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் ஆகிறார் !!! மே மாதம் அறிவிப்பு வெளியாகிறது.....
"இதுக்கு மேல நீ வயசுக்கு வந்தா என்ன ??? வரலைனா என்ன ???'
சிங்கத்தின் கர்ஜனை @AandeaDA - திரு.ராகுல்காந்தி அவர்கள் திரு.ஸ்டாலினிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.காலம் கடப்பது உங்களுக்கு மட்டுமல்ல,பெருசுகளுக்கும் தான்.
சவுந்தரராஜன் @SSk - 'காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்தி'
கல்யாண செலவு அதிகமாகும். பிழைக்க தெரிந்த பிள்ளை ராகுல் காந்தி.
நாகராஜசோழன் @kandaknd - குஷ்புவை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த இளங்கோவன் - செய்தி..
# ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ஆகா போறதா சொல்லி இருப்பாரு போல
ரெட் சுரேஷ் @redsuresh1985 - கூகுள் கூகுள் பண்ணி பார்த்தும் 'ராகுல் ' காந்தி கெடைக்கலியே??
கருத்து கந்தன் @karuthujay- ராகுல்காந்தி சிலநாட்கள் ஓய்வு எடுப்பதில் தவறில்லை- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் #விடுங்கண்ணே... நம்ம கட்சியே ஓய்வுலதான இருக்கு.. அவராச்சும் வேலை செய்யட்டுமே!
நையாண்டி நாரதர் @NaiyaandiNarath- நாடாளுமன்றத்துக்கு வராமல் ராகுல் ஓய்வெடுக்க விரும்பினால் அதை ஏன் விமர்சிக்கிறீர்கள் - திக் விஜய் # எங்க தூங்குனா என்ன? வரச்சொல்லுங்கண்ணே..
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago