காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி: விசாரணைக்கு உத்தரவு

By பிடிஐ

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர், பட்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று வன்முறை வெடித்தது. பட்கம் மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

திரார் பகுதியில் அண்மையில் இரண்டு பேர் என்கவுன்ட் டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் தீவிரவாதிகள் என்று ராணுவ தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இருவரும் அப்பாவிகள் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஹூரியத் அமைப்பு சார்பில் நகரில் அண்மையில் நடத்தப்பட்ட பேரணியில் பாகிஸ்தான் தேசியக் கொடியை பறக்கவிட்ட குற்றச்சாட்டின்பேரில் பிரிவினைவாதத் தலைவர் மசரத் ஆலம் கைது செய்யப்பட்டார்.

முழுஅடைப்பு போராட்டம்

திரார் பகுதியில் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, மசரத் ஆலம் கைது செய்யப்பட்டது ஆகியவற்றைக் கண்டித்து ஹுரியத் பிரிவினர் நேற்று மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அதன் ஒரு பகுதியாக ஸ்ரீநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அப்போது போலீஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்கினர்.

திரார் பகுதியில் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, மசரத் ஆலம் கைது செய்யப்பட்டது ஆகியவற்றைக் கண்டித்து ஹுரியத் பிரிவினர் நேற்று மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அதன் ஒரு பகுதியாக ஸ்ரீநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அப்போது போலீஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்கினர்.

பட்காம் மாவட்டம் நர்பாலியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அதை கட்டுப்படுத்த சிஆர்பிஎப் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் காயம் அடைந்தனர். இதில் சுஹைல் அகமது சோபி என்ற 9-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

உமர் பாரூக், அக்னிவேஷ் தடுத்து நிறுத்தம்

இதனிடையே மிதவாத ஹுரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் மீர்வைஸ் உமர் பாரூக் மற்றும் சமூக சேவகர் சுவாமி அக்னிவேஷ் ஆகியோர் நர்பால் நகருக்குச் செல்ல முயன்றபோது இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் மீர்வைஸ் உமர் பாரூக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

நிலைமையை சமாளிப்போம்

காஷ்மீர் நிலவரம் குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுகின்றன. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியது நம் கடமை. எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் அரசுக்கு உள்ளது என்றார்.

மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

நர்பாலியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 9-ம் வகுப்பு மாணவர் சுஹைல் அகமது சோபி உயிரிழந்தது காஷ்மீரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அறிக்கை 15 நாட்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்