வாக்கு வங்கி அரசியலுக்காக அம்பேத்கரை கொண்டாடும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

By பிடிஐ

சட்டமேதை பீமாராவ் அம்பேத் கரின் 125-வது பிறந்தநாளை பாஜக விமரிசையாகக் கொண்டாடுவது வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யும், தலித் மற்றும் அட்டவணையிலிடப்பட்ட சாதிகளுக்கான (எஸ்.சி.) தேசிய ஆணையத்தின் தலைவருமான பி.எல். புனியா நிகழ்ச்சியொன்றில் பேசியதாவது:

தலித் மற்றும் எஸ்.சி. இனத் தவர்கள் மீது பாஜக பகைமை பாராட்டுகிறது. எனவேதான், அவர்களுக்கான திட்டங்களை மத்திய பட்ஜெட்டில் பாதியாகக் குறைத்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தலித்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன, என்றார்.

தலித், எஸ்.சி.களுக்கான தேசிய ஆணையம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பி.சி. சாக்கோ பேசும்போது, “துரதிருஷ்ட வசமாக அம்பேத்கர் தலித் களின் அடையாளமாக பார்க்கப்படு கிறார். பாஜக உட்பட எந்த கட்சியும் சமூக சீர்திருத்தவாதியான அம்பேத்கரின் சித்தாந்தங்களை தலித்களின் வாக்கு வங்கிக்காக பயன்படுத்தக்கூடாது. அம்பேத்கர் எப்போதுமே காங்கிரஸ்காரராகவே அறியப் படுவார். ஒரு காங்கிரஸ்காரராக அவரின் பார்வைகளும், சமூக உள்ளடக்கங்களும் இந்திய தேசிய காங்கிரஸின் குறிக்கோள்களாகவே இருக்கும்.” என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே, திக் விஜய் சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்