திருப்பதி என்கவுன்ட்டரில் 20 பேர் கொலை குறித்து 10 நாட்களில் விசாரணை அறிக்கை: தேசிய பழங்குடியினர் ஆணைய துணைத் தலைவர் தகவல்

By என்.மகேஷ் குமார்

திருப்பதி வனப்பகுதியில் நடை பெற்ற என்கவுன்ட்டர் குறித்து அடுத்த 10 நாட்களில் தேசிய பழங் குடியினர் ஆணையத்திடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப் படும் என்று அதன் துணைத்தலைவர் ரவி தாகூர் தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 7-ம் தேதி அதிகாலை தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள் 20 பேரை டிஐஜி காந்தாராவ் தலைமையிலான ஆந்திர அதிரடி போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

இறந்தவர்களில் 13 பேர் பழங்குடி இனத்தவர்கள் என் பதால், இதுகுறித்து தேசிய பழங் குடியினர் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் ஆணையத்தின் துணைத் தலைவர் ரவி தாகூர் தலைமை யில் விசாரணைக் குழு அமைக்கப் பட்டது. இக்குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வழியாக திருப்பதி வந்தனர்.

அங்கிருந்து சேஷாசலம் வனப் பகுதிக்கு சென்ற அவர்கள், என்கவுன்ட்டர் நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். இவர்களுடன் சித்தூர் மாவட்ட வனத்துறை அதி காரி நிவாசுலு, திருப்பதி நகர போலீஸ் எஸ்.பி. கோபிநாத் ஜெட்டி மற்றும் வனத்துறை, வரு வாய்த்துறை, போலீஸ் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சென்றனர். ஆய்வுக்குப் பிறகு, உடன் வந்த சித்தூர் மாவட்ட அதிகாரிகளிடம் ரவி தாகூர் சரமாரியாக கேள்விகள் கேட்டார்.

“என்கவுன்ட்டர் நடந்த 2 இடங் களும் மைதானமாக உள்ளன. இந்த இடங்களில் என் கவுன்ட்டர் நடத்தியபோது போலீ ஸாரில் ஒருவருக்குக்கூட காயம் ஏற்படவில்லையா? நூற்றுக்கணக் கானோர் தப்பிச் சென்று விட்டதாகக் கூறுகிறீர்கள். இதில் ஒருவரைக் கூட நீங்கள் கைது செய்ய வில்லையா? சம்பவம் நடந்த இடத்தைப் பார்த் தால் திட்டமிட்ட கொலை என்ற சந்தேகம் எழுகிறது. என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்த சில செம் மரங்களில் பெயின்ட் அடையாளம் வந்தது ஏன்?” என்பன உட்பட அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி களை கேட்டார்.

பின்னர் “இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு எவ்வளவு நஷ்ட ஈடு வழங்கியது” என கேட் டார். இதற்கு அதிகாரிகள், “தமிழக அரசு ரூ.3 லட்சம் வழங்கி உள்ளது” என தெரிவித்தனர். அதற்கு ரவி தாகூர், “ஆந்திர அரசு எவ்வளவு வழங்கியது என்றுதான் நான் கேட்டேன். நீங்கள் தமிழக அரசு குறித்து ஏன் குறிப்பிடுகிறீர்கள்” என கூறினார்.

இந்த ஆய்வின்போது, என் கவுன்ட்டருக்கு தலைமை தாங்கிய அதிரடிப்படை டிஐஜி காந்தாராவ் வரவில்லை. இதற்கு ரவி தாகூர், காந்தாராவ் ஏன் வரவில்லை என கோபமாகக் கேட்டார். இவர் கேட்ட சில கேள்விகளுக்கு அதிகாரி கள் எங்களுக்குத் தெரியாது என பதிலளித்தனர். அதற்கு “உங்க ளுக்கு சுட மட்டும்தான் தெரியுமா?” என தாகூர் எதிர் கேள்வி கேட்டார்.

இதைத் தொடர்ந்து, நேற்று காலையில் ரவி தாகூர் தலைமையில் திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் என்கவுன்ட்டர் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.

இதில் போலீஸார், வனத்துறை யினர், வருவாய்த் துறையினர், தேசிய பழங்குடி ஆணைய குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக,ரவி தாகூர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என்கவுன்ட்டர் குறித்த முழு விசாரணை அறிக்கை அடுத்த 10 நாட்களுக்குள் தேசிய பழங் குடியினர் ஆணையத்தில் சமர்ப்பிக் கப்படும். மேலும் இந்த அறிக்கை தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் சமர்பிக்கப் படும். அரசு விசாரணையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இறந்த வர்களின் குடும்பத்தினருக்கு நிலமும், அரசு வேலை யும் தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆந்திர முதல்வரையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்

திருப்பதியில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநில செயலாளர் நாராயணா செய்தியாளர்களிடம் கூறியது:

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நடந்த என்கவுன்ட்டர் போலியானது. இது மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆதலால் இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு மீதும் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும். இவ்வாறு நாராயணா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்