குஜராத் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகை இந்திய கடற்படையினரும் கடலோர காவல் படையினரும் தடுத்து நிறுத்தினர். அந்தப் படகை சோதனையிட்டபோது 200 கிலோ போதைப் பொருள் பொட்டலங்கள் சிக்கின. அவற்றின் மதிப்பு ரூ.600 கோடி ஆகும்.பாகிஸ்தானை சேர்ந்த 8 பேர் அந்தப் படகில் இருந்தனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானில் இருந்து மர்மப் படகு ஒன்று இந்திய பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது என்று மத்திய உளவுத் துறை இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தது.
இதையடுத்து குஜராத் மாநிலத்தையொட்டிய சர்வதேச கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்த சங்ராம் என்ற கண்காணிப்பு கப்பல் நேற்று முன்தினம் இரவு ரோந்து சுற்றி வந்தது. மேலும் கடலோர காவல் படையின் கண்காணிப்பு விமான மும் அப்பகுதியில் வட்டமடித்தது.
அப்போது மர்மப் படகு ஒன்று இந்தியப் பகுதியை நோக்கி விரைந்து வருவதை கடலோர காவல் படை வீரர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ பகுதிக்கு கடற்படையைச் சேர்ந்த ஐ.என்.எஸ். கொண்டல் போர்க்கப்பல் விரைந்து வந்தது. வீரர்கள் இணைந்து செயல்பட்டு நடுக்கடலில் மர்மப் படகை சுற்றி வளைத்தனர்.
அந்தப் படகை சோதனையிட்ட போது 200 கிலோ போதைப் பொருள் பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இந்த பொட்ட லங்கள் ஹெராயின் போதைப் பொருளாக இருக்கலாம் என தெரிகிறது. அவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 600 கோடி ஆகும். மேலும் படகில் இருந்து செயற்கைக்கோள் தொலை பேசிகள், ஜிபிஎஸ் கருவிகள் ஆகிய வையும் பறிமுதல் செய்யப்பட்டன.
மர்மப் படகில் பாகிஸ்தானைச் சேர்ந்த 8 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப் பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட படகும், 8 பாகிஸ்தானியர்களும் கரைக்கு கொண்டு வரப்பட்டுள் ளனர். அவர்களிடம் உளவுத் துறை, இந்திய கடற்படை கூட்டாக இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் டி.கே.சர்மா கூறியதாவது: இந்திய கடற்படை, கடலோர காவல் படையின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க போதைப் பொருள் கடத்தலுக்கு மீன்பிடிப் படகுகளை கடத்தல் காரர்கள் பயன்படுத்தி வருகின் றனர். அவர்களின் படகுகளில் அதிநவீன செயற்கைக்கோள் தொலைபேசிகள் உள்ளன.
இந்திய ரோந்து கப்பல்கள் நெருங்கி வருவது தெரிந்தால் உடனடியாக வேறு படகுகளுக்கு தகவல் தெரிவித்து போதைப் பொருளை மாற்றிவிடுகின்றனர். இந்த கடத்தலின் பின்னணியில் செயல்படும் கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே பிடிபட்ட 8 பேரும் கடத்தல்காரர்களா அல்லது தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து மத்திய உளவுத் துறை விசாரித்து வருகிறது.
கடந்த டிசம்பரில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சிறிய ரக கப்பலை கடலோர காவல் படையினர் இடைமறித்தனர். அப்போது நடுக்கடலில் அந்த கப்பல் வெடித்துச் சிதறியது. ஆனால் பாகிஸ்தான் அரசு அதனை மறுத்தது. இப்போது மீண்டும் ஒரு பாகிஸ்தான் படகு பிடிபட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago