நேபாளத்தில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவு பயங்கர நிலநடுக்கம் காரணமாக இன்று நாடு முழுதும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இந்நிலையில் மாநில முதல்வர்களுடன் பேசி நிலவரங்களைக் கேட்டறிந்தார் பிரதமர் மோடி.
மேலும், நிலநடுக்க விளைவுகளை கூர்ந்து கவனிக்க உயர்மட்டக் கூட்டத்தையும் 3.00 மணியளவில் கூட்டியுள்ளார் பிரதமர் மோடி.
பிஹார், உ.பி., மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில முதல்வர்களைத் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
“உள்நாட்டிலும், நேபாளத்திலும் கூடுதல் தகவல்களைப் பெற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம், மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீட்பு, மற்றும் நிவாரணம் பற்றியும் பரிசீலித்து வருகிறோம்” என்று மோடி ட்வீட் செய்துள்ளார். நேபாளத்தை ஒட்டி உள்ள இந்திய எல்லைப்பகுதிகளில் பூகம்ப பாதிப்பு நிலவரங்களையும் மோடி கேட்டறிந்தார்.
இன்று காலை 11.41 மணியளவில் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை சகல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் ஒருவர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago