கோவா சென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, நேற்று முன்தினம் அங்குள்ள பேஃப் இண்டியா ஜவுளிக் கடை யில் புதிய உடை வாங்கினார். அதை உடை மாற்றும் அறைக்கு எடுத்துச் சென்றபோது அங்கு கேமரா இருப்பதை கண்டுபிடித்து புகார் அளித்தார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், கடைக்கு சீல் வைத்து 4 ஊழியர்களை கைது செய்தனர். இந்நிலையில் கைதான 4 பேருக்கும் நேற்று கோவா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
உடை மாற்றும் அறை உட்பட எந்த இடத்திலும் ரகசிய கேமராக் கள் பொருத்தப்படவில்லை. கண் காணிப்பு கேமராக்கள்தான் உள்ளன. இதனால் அமைச்சர் ஸ்மிருதி இரானி ஏதாவது அசவுகரி யத்தை உணர்ந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள் கிறோம். எங்கள் நிறுவனத்தில் 70 சதவீதம் பெண்கள் வேலை பார்க் கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவம்
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் கோல்காபூரில் பேஃப் இந்தியா கடைக்கு வந்த பெண் ஒருவரை கடை ஊழியர் தனது செல்போனில் படம் பிடித்ததாக கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago