சரக்கு, சேவை வரி மசோதா மக்களவையில் தாக்கல்

By செய்திப்பிரிவு

நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வரும் சரக்கு, சேவை வரி மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அந்த மசோதா பரிசீலனைக்காக தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது பேசிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இந்த மசோதா குறித்து மாநிலங்கள் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்தார்.

இந்த அரசமைப்புச் சட்ட திருத்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் உறுப்பினர்கள், மற்றும் திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதா பரிசீலனைக்காக தாக்கல் செய்யப்பட்டதற்கு அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆகியவை ஆட்சேபம் தெரிவித்தபோதிலும் வெளிநடப்பு செய்யவில்லை.

மசோதாவை தாக்கல் செய்து பேசிய அருண் ஜேட்லி, இந்த மசோதா மத்திய அரசு, மாநிலங்கள் ஆகிய இரு தரப்புக்குமே இழப்பு ஏற்படுத்தாது. இது இந்தியாவின் மொத்த உற்பத்தி அளவை அதிகரிக்கும். எனவே இந்தியாவின் வருவாய் அதிகரிக்கும். எனவே பரிசீலனைக்கு இதை ஏற்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்