மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு வழங்கப்படும் பாது காப்பு ‘இசட் பிளஸ்’ தரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி அவருக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள். மிகவும் முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றி ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்கம், ஜேட்லிக்கு வழங்கப்படும் பாது காப்பை அதிகரிக்க அண்மையில் முடிவு செய்தது.
குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக் கப்பட்ட அருண் ஜேட்லிக்கு இதுவரை டெல்லி போலீஸ் சார்பில் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
தற்போது ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பின்படி, ஜேட்லி பயணம் செய்யும் வாகனத்துடன் வழியேற்படுத்தி தரும் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனம் செல்லும். அமைச்சரின் வாக னத்தில் தானியங்கி துப்பாக்கி ஏந்திய 2 பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்வார்கள்.
ஜேட்லியின் பாதுகாப்பு பணிக்காக 60-க்கும் மேற்பட்ட வீரர்களை மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஒதுக்கியுள்ளது.
ஜேட்லி வசிக்கும், டெல்லி கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள இல்லத்தில் துணை ராணுவ அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பு தருவார்கள். மெட்டல் டிடெக்டர் வழியாக பார்வையாளர்கள் செல்வது கட்டாயமாக்கப்படும்.
ஜேட்லியின் அமைச்சரவை சகாக்களான உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு பெறுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago