போலி அடையாள அட்டைகளுடன் தமிழகத்தில் தங்கும் வங்கதேசத்தினர்: இளம் பெண்களுக்கு வலை விரிப்பதாக அதிர்ச்சி தகவல்

By ஆர்.ஷபிமுன்னா

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் வங்கதேசத்தினர் தமிழ கத்தில் போலி அடையாள அட்டை களுடன் தங்கி வருவதாகக் கூறப் படுகிறது. இவர்களில் சிலர் தமிழக இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி கடத்திச் செல்வதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையின் பிரபல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் மதுரையை சேர்ந்த 21 வயது மலர்விழி. (பெயர், ஊர் மாற்றப் பட்டுள்ளது). இவருக்கு தங்கள் நிறு வனத்தில் காவலாளியாக பணியாற்றும் 26 வயது அப்துல் காலீத் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக வளர்ந்து, ஒருநாள் திடீரென மலர்விழியுடன் தமிழகத்தை விட்டு கிளம்பிவிட்டார் அப்துல் காலீத். தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் பணியிடத்தில் விசாரித்தபோது, அந்த இளைஞரின் வாக்காளர் அட்டையின் நகல் கிடைத்தது. அதில் அசாம் முகவரி இருந்துள்ளது.

இதையடுத்து 7 பேர் கொண்ட தமிழக போலீஸ் படையுடன் அப்பெண் ணின் சித்தப்பா அசாம் கிளம்பியுள்ளார். அசாமில் தமிழ்ப் பெண்ணை மணந்த ஆளும்கட்சி அரசியல்வாதி ஒருவரின் உதவியுடன் அப்துல் காலீத்தை தேடியபோது, அவரது வாக்காளர் அட்டை போலி எனத் தெரியவந்தது.

எனினும் அந்த முகவரியில் ஒருவரை பிடித்து அங்குள்ள காவல் நிலையத்தில் விசாரித்ததை தொடர்ந்து, அருகில் கட்கட்டி என்ற இடத்தில் வசித்த காலீத்தின் பெற்றோர் சிக்கினர். பெற்றோர் போலீஸ் பிடியில் வந்ததால் அடுத்த 4 மணி நேரத்தில் கட்கட்டி காவல் நிலையத்தில் ஆஜரானார் காலீத்.

அவருடன் இருந்த மலர்விழி தனது சித்தப்பாவை கண்டதும் ஓடி வந்து கதறி அழுதுள்ளார். “5 கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருக்கும் காலீத்தின் நடவடிக்கைகள் சரியில்லை. அவரை நம்பி ஏமாந்துவிட்டேன்” என கண்ணீர் வடித்துள்ளார்.

காலீத், இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய வங்கதேச குடும்பத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. அவர் மீது வழக்கு, நீதிமன்ற நடவடிக்கைகள் என்றால் மலர்விழியின் வாழ்க்கையும் பாதிக்கும் என பெற்றோர் கருதியதால் அவரை எச்சரித்து விட்டு அப்பெண்ணுடன் ஊருக்குப் புறப்பட்டனர் தமிழக போலீஸார்.

இது குறித்து அசாம் வந்த தமிழக போலீஸார் ‘தி இந்து’விடம் கூறும்போது, “காலீத் மீதானப் புகாரை பெற்றவுடன் தமிழகத்தின் மற்ற காவல் நிலையங்களில் அது தொடர்பாக விசாரித்தோம். அதில் கடந்த ஓரிரு ஆண்டுகளில் இதுபோல் 4 சம்பவங்கள் நடந்து தமிழக இளம் பெண்களை வங்கதேச இளைஞர்கள் ஏமாற்றி அழைத்துச் சென்றுவிட்டது தெரிய வந்தது. ஆனால் அவர்களில் ஒருவர் கூட இன்னும் மீட்கப்படாத நிலையில் மலர்விழியை மட்டும் மீட்க முடிந்ததற்கு, அசாமில் கிடைத்த உதவிகளே காரணம். சென்னையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட பிஹார்வாசிகள் 5 பேர் 2012-ல் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டபோது சென்னை காவல் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இந்த உத்தரவை தீவிரமாக அமல் படுத்தினால் இதுபோன்ற பிரச்சி னைகளை தவிர்க்கலாம்” என்றார்.

தமிழகத்தில் கட்டுமானப் பணி உள்ளிட்ட வேலைகளுக்காக பிஹார், ஜார்க்கண்ட், உ.பி. போன்ற வட மாநி லங்களில் இருந்து ஆட்கள் வருவது சுமார் 10 ஆண்டுகளாக அதிகரித் துள்ளது. இவர்களில் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் வழக்கமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி வங்கியில் 48 கிலோ தங்கம் உ.பி. கிரிமினல்களால் கொள் ளையடிக்கப்பட்டது.

இது குறித்து அசாம் மாநில காவல்துறை அதிகாரிகள் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “இளம்பெண் களை காதல் வலையில் சிக்க வைத்து, திருமணம் என்ற பெயரில் கடத்தி வந்து விபச்சாரக் கும்பல்களிடம் விற்பது அதிகமாகி விட்டது. இதில் ஈடுபடும் வங்கதேசத்தினரை தேடி தென்னிந்திய மாநிலங்களில் இருந்து எங்களுக்கு அதிக புகார்கள் வரு கின்றன.

இந்த இளம் பெண்களை கொல்கத்தா, டெல்லி, மும்பை போன்ற நகரங்களிலும் நேபாளத்திலும் உள்ள விபச்சார விடுதிகளிலும் விற்று விட்டு தப்பி விடுகின்றனர்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்