உ.பி.யில் இயற்கை பேரிடர்: ரூ.1000 கோடி நிதியுதவி கோரி பிரதமருக்கு அகிலேஷ் கடிதம்

By பிடிஐ

உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் இயற்கை பேரிடரை சமாளிக்க மத்திய அரசு ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பருவம் தவறிய மழை காரணமாக 51 மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இயற்கை பேரிடர் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு உ.பி. மாநிலத்துக்கு ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பருவம் தவறிய மழை காரணமாக 51 மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இயற்கை பேரிடர் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு உடனடியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக நேற்று மாநிலம் முழுவதும் விவசாய பாதிப்பு குறித்து அகிலேஷ் யாதவ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், மழையினால் பயிர்கள் சேதம் அடைந்ததை தொடர்ந்து உயிரிழந்த விவசாயிகளுக்கு முதல்வர் நிவாரண உதவித் தொகையில் இருந்து தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளின் விடுமுறையை ரத்து செய்தும் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

26 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்