சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட் டது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகி வருகிறார்.
இதை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ஜெய லலிதா தரப்பினருக்கு ஆதரவாக அரசு வழக்கறிஞர் செயல்படுகிறார். எனவே, மேல்முறையீடு விசாரணையில் அவர் ஆஜரானது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கோரினார்.
இந்த மனுவை எம்.பி.லோக்கூர், ஆர்.பானுமதி ஆகியோர் அடங் கிய அமர்வு விசாரித்து இரு வேறுவிதமான தீர்ப்பு வழங்கினர். மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் ஆஜரானது தவறு என்று நீதிபதி லோக்கூரும், அதில் தவ றில்லை, சரிதான் என்று நீதிபதி பானுமதியும் தீர்ப்பு வழங்கினர்.
இதையடுத்து அன்பழகன் மனுவை, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தர விட்டார். அதன்படி, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பவானி சிங்கை நீக்க கோரும் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை நடத்துகிறது. முன்னதாக ஜெயலலிதாவின் ஜாமீனை மே 12-ம் தேதி வரை நீட்டித்து கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago