மிகுந்த சலசலப்புக்கு இடையே நிலம் கையகப்படுத்துதல் மசோதா மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி மக்களவையில் இம்மசோதாவை தாக்கல் செய்தார்.
மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பின. தொடர் அமளி காரணமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக கடந்த 3-ம் தேதி (ஏப்ரல் 3) அன்று நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்துக்கு அனுமதி அளித்து மறு பிரகடனம் செய்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டது கவனிக்கத்தது.
2-ம் பகுதியில் முதல் நாளில்...
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் பகுதி இன்று தொடங்கியது. முதல்நாளிலேயே சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் தாக்கல் செய்யப்பட்டிக்கிறது.
அவை அலுவல் பட்டியல்படி, நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி அரசமைப்புச் சட்டத்தின் 123(2)(ஏ)வின் கீழ் குடியரசுத் தலைவர் பிறப்பித்த நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தின் நகலை தாக்கல் செய்தார்.
நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை பட்ஜெட் கூட்டத்தின் முதல் பகுதியில் நிறைவேற்ற முடியவில்லை. எனவே 2வது முறையாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு அமல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரின் இந்த இரண்டாவது பகுதியில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சியில் இறங்கியிருக்கிறது.
நிலம் கையகப்படுத்துதல் மசோதா:
'அரசு மற்றும் தனியார் திட்டங் களுக்கு 80 சதவீத விவசாயிகள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிலங்களைக் கையகப்படுத்த முடியும். ஐந்து ஆண்டுகளுக்குள் அந்த நிலத்தை பயன்படுத்தாவிட்டால் விவசாயிகளிடமே திருப்பி அளிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட திருத்தங்களுடன் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
மத்தியில் பாஜக பதவியேற்ற பிறகு இந்தப் பிரிவுகளை நீக்கி கடந்த ஆண்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 6 மாதங்களுக்குள் அவசர சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன்படி அவசர சட்டத் துக்கு மாற்றாக நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதியில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை.
அவசர சட்டத்தின் கால அவகாசம் காலாவதியாகவிருந்த நிலையில், மீண்டும் அவசர சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை அண்மையில் முடிவு செய்தது.
பொதுவாக அவசர சட்டங்களைப் பிறப்பிக்க நாடாளுமன்றத்தின் ஏதாவது ஓர் அவையை முடித்துக் கொள்ள வேண்டும். அதன்படி மாநிலங்களவை அண்மையில் முடித்துக் கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் பிரகடனம் செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதனை பரிசீலித்த குடியரசுத் தலைவர் அந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.
தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி முடிவடைந்து, இரண்டாவது பாதி இன்று தொடங்கியிருக்கிறது. இதில் எப்படியாவது நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago