பெங்களூருவின் கிராமப் பகுதியில் உள்ள கல் குவாரி குட்டையில் நீச்சல் பழகச் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை அடுத்துள்ள எலஹங்கா அருகே சிக்கஜலா கிராமத்தில் மிக ஆழமாக தோண்டப்பட்ட கல் குவாரியில் மழை நீர் தேங்கியுள்ளது. ஏரி போல காட்சியளிக்கும் இதை பெங்களூருவாசிகள் 'பெட்டஹலசூரு ஏரி' என அழைக்கின்றனர். எனவே விடுமுறை நாட்களில் சிறுவர்களும் இளைஞர்களும் அங்கு குளிக்க செல்வார்கள்.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ரேவண்ணா சித்தேஸ்வரா பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் 8 மாணவர்கள் நேற்று அங்கு நீச்சல் அடிக்கச் சென்றனர். நீச்சல் தெரிந்த 3 மாணவர்களிடம் நீச்சல் கற்றுக்கொள்வதற்காக 5 பேர் அங்கு சென்றுள்ளனர்.
முதலில் நீச்சல் தெரிந்த 3 மாணவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளனர். நீச்சல் தெரியாத 5 மாணவர்கள் கடையிலே இருந்துள்ளனர். இதையடுத்து நீச்சல் தெரியாத மாணவர்களில் 2 பேரை அழைத்துச் சென்று நீச்சல் கற்றுக்கொடுத்தபோது ஒரு மாணவர் நீரில் மூழ்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற சென்ற மாணவர்களும் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கியுள்ளனர்.
இதைக் கண்டு கரையில் இருந்த 3 மாணவர்கள் அதிர்ச்சி அடைந் தனர். சம்பவம் குறித்து அக்கம்பக்கத் தில் இருந்தவர்களுக்கும் போலீஸா ருக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வருவதற்குள் 5 மாணவர்களும் நீரில் மூழ்கி, பரிதாபமாக பலியாயினர். 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு படை வீரர்கள் நீரில் மூழ்கிய 5 மாணவர் களின் உடல்களையும் மீட்டனர்.
இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு வந்த பெங்களூரு மாநகர துணை காவல் ஆணையர் விகாஷ் குமார் விகாஷ் கூறும்போது, “மாணவர்கள் மூழ்கிய பகுதி சுமார் 60 அடி ஆழம் கொண்டது.
இதுபோன்ற சம்பவம் நடைபெறுவதால், பெட்டஹல்சூரு ஏரியில் குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர். இருப்பினும் மாணவர்களும்சிறுவர்களும் விடுமுறை நாட்களில் இங்கு வந்து குளிப்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.
முதல்கட்ட விசாரணையில் நீச்சல் தெரியாததால் மாணவர்கள் பலியானது தெரியவந்துள்ளது. 5 மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக டாக்டர் அம்பேத்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து சிக்கஜலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்” என்றார்.
நேபாள நாட்டை சேர்ந்தவர்கள்
பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் பலியானவர்கள் 5 பேரும் பி.இ. எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் 2-வது ஆண்டு படித்து வந்தவர்களாவர்.
இதில் ராஜேஷ், கெம்ப் பாட்டீல் ஆகிய இருவரும் நேபாள நாட்டை சேர்ந்த மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.
அருண், ஹரீஷ், ராஜேஷ் ஆகிய மற்ற மூவரும் பெங்களூருவை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது உறவினர் கள் டாக்டர் அம்பேத்கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் குவிந்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
54 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago