சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நேற்று நடத்திய திடீர் தாக்குதலில் 7 போலீஸார் பலியாகினர். சுமார் 12 பேர் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அடர்ந்த வனப்பகுதி நிறைந்த சுக்மா மாவட்டம் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் மிக்க பகுதியாகும். நேற்று மதியம் மாநில காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் போலம்பள்ளி- பிட்மெல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த 100-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எல்லா திசைகளிலிருந்தும் திரண்டு போலீஸாரை சுற்றிவளைத்து துப்பாக்கிகளால் சுட்டனர். போலீ ஸாரும் தகுந்த பதிலடி கொடுத் தனர்.
இரு தரப்புக்கும் இடையே சுமார் 2 மணி நேரம் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 7 போலீஸார் பலியாகினர். 12 பேர் காயம் அடைந்தனர் என மாநில காவல்துறை கூடுதல் இயக்குநரும் சிறப்புப் படையின் தலைவருமான ஆர்.கே.விஜ் தெரிவித்தார்.
காயம் அடைந்த வீரர்கள் இரண்டு ஹெலிகாப்டர்களில் ஜக்தால்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், போலீஸ் படையிடம் இருந்த பெருமளவு ஆயுதங்களை கொள் ளையடித்துச் சென்றுள்ளனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் கமாண்டர் சங்கர் ராவ், தலைமை கான்ஸ்டபிள்கள் ரோஹித் சோரி, மனோஜ் பாகல், மோகன், கான்ஸ்டபிள்கள் ராஜ்குமார், கிரண் தேஷ்முக், ராஜ்மன் நேத்தம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் உடல்கள் இன்னும் வனப்பகுதியில்தான் உள்ளன. அங்கு பலத்த மழை பெய்து வருவதால் ஹெலிகாப்டரை இயக்குவதில் சிரமம் ஏற்பட் டுள்ளது. அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் இன்றுதான் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில், மாவோயிஸ்ட் உள்ளூர் தலை வர்கள் சோனு, நாகேஷ், ஹித்மா ஆகியோர் தலைமையிலான தீவிரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக் கப்படுகிறது. அவர்களை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத் தியுள்ளனர்.
ராஜ்நாத் சிங் ஆலோசனை
தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், துறை அதிகாரிகளுடன் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார்.
இதுகுறித்து நிருபர்களிடம் ராஜ்நாத் சிங் கூறும்போது, சம்பவ பகுதிக்கு கூடுதலாக சி.ஆர்.பி.எப். வீரர்கள் அனுப்பப் பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரலில் சுக்மா பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்கு தலில் 74 சிஆர்பிஎப் வீரர்கள் கொல் லப்பட்டனர். 2013-ம் ஆண்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்கு தலில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago