ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்த்துவிட்டு, மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா அறிவுரை கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் நேற்று செய்தியாளர் களிடம் ரோஜா கூறியதாவது:
மாநிலத்தில் பல்வேறு பிரச் சினைகள் உள்ளன. மகளிர் சுய உதவி குழுவினரின் வங்கி கடன் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுதவிர, ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 அங்கன்வாடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதான் பெண்கள் மீது முதல்வர் காட்டும் மரியாதையா? சிங்கப்பூர், மலேசியா, சீனா என அடிக்கடி முதல்வர் தனது அமைச்சர்களுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார்.
எதற்காக செல்கிறோம் என்று தெரியாமலேயே வெளிநாடு களுக்கு சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்களின் வரிப் பணம்தான் வீணாகிறது.
வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வதை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவர் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
அனுமதி பெறாமல் நடத்தப்படும் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் தீவிர போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு ரோஜா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago