மேற்குவங்க நகராட்சி தேர்தலில் பாஜகவை பின்னுக்குத் தள்ளியது திரிணமூல்

By ஐஏஎன்எஸ்

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற நகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பரவலாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மாநகராட்சி உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள 91 நகராட்சிகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. கொல்கத்தா மாநகராட்சியில் மட்டும் 60% வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கொல்கத்தா நகராட்சியில் உள்ள 144 வார்டுகளில் 85 வார்டுகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா நகராட்சியைத் தவிர 51 நகராட்சிகளில் திரிணமூல் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 6 நகராட்சிகளை கைப்பற்றியுள்ளது. இடதுசாரிகளுக்கு 5 நகராட்சிகள் கிடைத்துள்ளன. பாஜக மேற்குவங்க நகராட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில், தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாலேயே வெற்றி கிடைத்துள்ளது என பாஜக, இடதுசாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்