ஷில்லாங்கில் விஷப் பழங்களை உண்டதால் 14 தொழிலாளர்கள் மரணம்

By பிடிஐ

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் இருந்து மேகாலயாவுக்கு வந்த 14 தொழிலாளர்கள், விஷ காட்டுப் பழங்களை உண்டதால் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தில் உள்ள தங்கள் முகாமில் மரணமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் உம்புங் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

"எங்களுக்கு இந்தச் சம்பவம் குறித்து திங்கள்கிழமைதான் தகவல் கிடைத்தது. தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது" என்று கிழக்கு ஜைந்தியா மலை மாவட்ட காவல்துறை அதிகாரி எம்.கே.தகர் கூறியுள்ளார்.

மேலும் அவர், "அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் அருகில் உள்ள காட்டுக்குச் சென்று பழங்களைப் பறித்தனர். பின்னர் தங்கள் முகாமுக்கு வந்து அந்தப் பழங்களை உண்டுவிட்டு இரவு படுக்கச் சென்றனர். காலையில் அவர்கள் அனைவரும் இறந்துகிடந்தனர். அவர்களின் மரணத்துக்கு விஷப் பழங்கள் என்று தெரியாமல் அவர்கள் பறித்து வந்த பழங்கள்தான் காரணமாக இருக்கும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

51 secs ago

இந்தியா

44 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்