கேரள அமைச்சரை முற்றுகையிட்ட பெண் தொழிலாளர்கள்

By பிடிஐ

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேங்காய் நார்த் தொழிலில் ஈடு பட்டு வரும் பெண் தொழிலாளர் கள், கேரள வருவாய் மற்றும் தேங்காய் நார்த்துறை அமைச்சர் அடூர் பிரகாஷை நேற்று முற்றுகையிட்டனர்.

கேரள தலைமைச் செயலகம் முன்பு சுமார் 10 தேங்காய் நார் பெண் தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களாக கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உற்பத்திப் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மார்க்சிஸ்ட் தொழிற்சங்கத்தை சேர்ந்த அப்பெண்கள், நேற்று தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர். அங்கு அமைச்சர் அடூர் பிரகாஷ் வந்தபோது, முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

தகவலறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவர்களை வெளியேற்றினர். இதனிடையே போராட்டக்காரர்களைக் கைது செய்ய வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்