ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இரு அவைகளிலும் ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் உரையாற்றினார்.
மாநிலப் பிரிவினைக்குப் பிறகு ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் முதல் பட்ஜெட் கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் இரு மாநிலங்களுக்கும் பொது ஆளுநரான ஈ.எஸ்.எல். நரசிம்மன் உரையாற்றினார்.
தெலங்கானா சட்டப் பேரவையில், ஆளுநர் உரையின்போது, தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் உரையின் பிரதியை கிழித்து வீசினர். இதை ஆளும் டி.ஆர்.எஸ். கட்சியினர் தடுத்தனர்.
இதனால், இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆளுநரின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே முதல்வர் கே. சந்திரசேகர ராவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, ஆந்திர சட்டப்பேரவையில் ஆளுநர் நரசிம்மன் உரையாற்றினார். இதில் ஆந்திராவுக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். ஆளுநர் உரைக்கு பின்னர் இரு மாநில அவைகளும் திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago